“Academy of Achievement" அமெரிக்காவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உயரிய கவுரவம் .
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற விழாவில் "Academy of Achievement" விருது வழங்கப்பட்டது. ஹாலிவுட் இயக்குநர் பீட்டர் ஜாக்சன் இந்த விருதை வழங்கினார்.
விருதைப் பெற்ற ரஹ்மான், "இந்த அங்கீகாரம் எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. என் நாடு, என்னுடன் பயணித்த கலைஞர்கள் மற்றும் பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள் இல்லாமல் இந்த சாதனை சாத்தியமாகியிருக்காது," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
0
Leave a Reply